கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்

தினமும் நாம் சாப்பிடும் உணவில் நச்சு தன்மையான பொருட்கள் காணப்படலாம்.நமக்குத் தெரியாமல் நாமே அதனை உட்கொண்டு வரலாம்.இவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகள் அப்படியே உடலில் தங்கினால் நாம் 10 வருடங்களில் இறந்து விடலாம்.

இவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கே ஈரல் காணப்படுகின்றது.கல்லீரலானது உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் வடிகட்டுகிறது மற்றும் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் போன்ற நச்சுப் பொருட்களை வடிகட்டி  உடைக்கிறது.கல்லீரலானது பித்தத்தை உற்பத்தி செய்கிறது, இது கொழுப்புகளை ஜீரணிக்க மற்றும் கழிவுகளை எடுத்துச் செல்ல உதவி புரிகின்றது.

கல்லீரலானது இரத்தத்தில் உள்ள பெரும்பாலான இரசாயன அளவைக் Chemical Level கட்டுப்படுத்துகிறது மற்றும் பித்தத்தை  வெளியேற்றுகிறது.  இது கல்லீரலில் இருந்து கழிவுப்பொருட்களை எடுத்துச் செல்ல உதவுகிறது.  வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் அனைத்து இரத்தமும் கல்லீரல் வழியாக செல்கிறது.

கல்லீரலில் 90% பகுதி அகற்றப்பட்ட பிறகும், கல்லீரலானது மறுபடியும் வளந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் தன்மை கொண்டது.இருப்பினும், கல்லீரலில் சேதமடைந்த திசுக்களை புதிய செல்கள் மூலம் மாற்ற முடியும். 

50 முதல் 60 சதவீதம் வரையிலான கல்லீரல் செல்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் செயலிழந்தால் டைலெனோல் Tylenol அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், 30 நாட்களுக்குப் பிறகு எந்தச் சிக்கலும் ஏற்படாத பட்சத்தில் கல்லீரல் முழுமையாகச் சரிசெய்யலாம்.

கல்லீரலானது பாதிப்படைவதற்கான காரணங்கள் 


1.மது அருந்துதல் :

ஒவ்வொரு தடைவையும்  எமது கல்லீரல் alcohol வடிகட்டும்போது, ​​பல கல்லீரல் செல்கள் இறக்கின்றன.

மது அருந்துவதால் எமது உடலில் உள்ள கல்லீரலில் சிறிது சிறிதாக காயங்களை ஏற்படுத்துகின்றது.மதுபானத்தில் காணப்படும் நச்சுத் தன்மையான பொருட்கள் கல்லீரலில் படிவதனாலேயே புண்கள் உருவாகின்றன.தினசரி மது அருந்துபவர்களுக்கு தொடர்ந்து கல்லீரலில் காயங்கள் ஏற்படும்.

அதிக காயங்கள் ஏற்படுவதனால் கல்லீரல் நிறம் மாறும்.அதன் பின்பு கல்லீரல் சுருங்கும்.அதன் பின்பு 90 தொடக்கம் 95 வீதமான கல்லீரல் பாதிப்படையும்.மது அருந்துபவர்களுக்கு விலா எழும்பிற்கு கீழ் வயிறு வீங்கிக் காணப்படும்.அதிகளவு மது அருந்துவதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படும்,இதய நோய்கள் ஏற்படும்,செமிபாட்டுப் பிரச்சினைகள் ஏற்படும்.

2.கொப்பி/ தேனீர் குடிப்பதனால் :

அதிகளவு கொப்பி அருந்துவதனால் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.காலை மாலை என அளவேடு கொப்பி / தேனீர் அருந்துவது கல்லீரலுக்கு நல்லது.

Tea

3.புகையிலைப் பாவனை :

புகையிலையில் காணப்படும் nicotine புகையிலையைப் பயன்படுத்துவதால் 

இரத்தத்தில் கலப்பதினால் நச்சுத் தன்மையை ஏற்படுத்துகின்றது.ஆகவே நச்சுத் தன்மையான இரத்தத்தினை கல்லீரல் சுத்திகரிப்பதனால் கல்லீரல் அதிகளவு பாதிப்படைகின்றது.

4. காரமான உணவுகளால் :

அதிகளவு காரமான உணவுகளை spicy உணவில் சேர்பதனாலும் கல்லீரல் பாதிப்படையும்.

5.மருந்துகள் :

அதிகளவு மருந்துகளை தேவைக்கு அதிமாக பயன்படுத்துவதனால்.அது கல்லீரலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்
Medicine

6. கலப்படமான மற்றும் Chemical அடங்கிய உணவுகளை உண்பதனாலும் இது கல்லீரலை பாரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

7.மஞ்சள்காமாலையை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் தேற்றுக் காரணமாக கல்லீரலில் புற்றுநோய்கள் ஏற்பட்டு கல்லீரல் பாதிப்படையும்.

கல்லீரலை சுத்தப்படுத்துமாக பாதுகாக்கும் வழிமுறைகள் 

1.பச்சைக் காய்கறிகள்/ கீரைகள் :

இந்த பச்சைக் காய்கறிகளில் மற்றும் கீரைகள் காணப்படும் நார்ச்சத்து கல்லீரலுக்கு மிகவும் அவசியமானது.எவ்வளவு அதிகம் இதனை உணவில் சேர்க்கிறோமொ அவளவு நன்மை பயக்கும்.

அது மட்டும் இன்றி பல்வேறு விதமான விற்றமீன்கள் மற்றும் மினரல்கள் இந்த பச்சைக் காய்கறிகளில் காணப்படுகின்றது.இதனைத் தவிர்த்து வேப்பம் பூ மற்றும் வேப்பம் இலை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது கல்லீரலுக்கு நல்லது.

கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்
Vegetables

2.எலுமிச்சை/தோடம்பழம்:

இவற்றில் கல்லீரலை சுத்தப்படுத்தக் கூடிய அமிலங்கள் காணப்படுகின்றது.

கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்
Lemon & Orange

3.மஞ்சள்:

மஞ்சலானது ஒரு நல்ல antioxidant ஆகும்.இரவில் பாலுடன் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து குடிப்பது அல்லது காலையில் தேனில் கலந்து குடிப்பது கல்லீரலுக்கு நல்லது.

Turmeric

4.வெந்தயம் :

இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் பருகுவது கல்லீரலுக்கு நல்லது.வெந்தயத்தில் விற்றமின் A,  விற்றமின் B ,விற்றமின் K, பொட்டாசியம்,கல்சியம் இரும்புச் சத்து, புரோட்டீன் போன்ற அனேகமான சத்துக்கள் காணப்படுகின்றன இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது . அதாவது வெந்தய இட்லி, வெந்தயக் குழம்பு போன்றவாறு பல்வேறு விதமாக உணவில் பயன்படுத்தலாம்.

கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்
Fenugreek

5.சக்கரை/ வெள்ளம் :

சக்கரையில் antioxidant ,Zn போன்ற சத்துகள் கல்லீரலை சுத்தம் செய்யும்.

6.தேங்காய் :

தேங்காய் எண்ணெய்யில் Oxidative damage கல்லீரலில் வராமல் தடுக்கும்.

7.பெரிய நெல்லிக்காய் :

பெரிய நெல்லிக்காய் ஆனது கல்லீரலில் வீக்கத்தைக் குறைக்கும்.மற்றும் கல்லீரலுக்கு வரும் Oxidative damage தடுக்கும்.

கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்
gooseberry

8.திராட்சைப் பழங்கள் : 

கல்லீரலுக்குப் மிகவும் பிடித்த பழமாக திராட்சைப் பழம் காணப்படுகின்றது.இந்த திராட்சைப் பழங்கள் கல்லீரல்களின் செல்களை பாதுகாக்கும்.

கல்லீரலை சுத்தமாக பாதுகாக்கும் வழிமுறைகள்
Grapes

9.பால் நெருஞ்சில் :

இவை அதிகளவாக அமெரிக்கா ,ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் காணப்படுகின்றது.இந்த பால் நெருஞ்சிலில் silymarin chemical எனப்படும் கல்லீரலுக்கு நன்மை பயக்கும் இராசயன பொருட்கள் காணப்படுகின்றது.

10.கரட் / பீற்றுட் :

கரட்டில் carrot பீட்டா கரோட்டின் என அழைக்கப்படும் கரோட்டினாய்டுகள் காணப்படும், இது கல்லீரலை ஆரோக்கியமான நிலையில்  வைத்திருக்க துணை புரிகின்றது.  கரோட்டினாய்டுகள் கொழுப்பைக்  கரையக்கூடியவை வல்லமை வாய்ந்தது, இது பித்தத்தை தூண்டுகிறது மற்றும் கல்லீரலில் காணப்படும் நச்சுத்தன்மையை நீக்க துணை புரிகின்றது.

benefits-of-eating-carrots-8
Carrots

11.பாகற்காய் :

எமது உணவில் வாரத்திற்கு ஒருமுறை பாகற்காய் சேர்த்து வந்தால் கல்லீரலுக்கு நன்மை பயக்கும்.

12.கரும்புச் சாறு:

கரும்புச் சாறு காரத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றது.கல்லீரலை அமிலத்தன்மை வாய்ந்த உணவுகள் அதிகம் பாதிக்கின்றது எனவே கரும்புச் சாற்றில் அதிகளவு காரத்தன்மை காணப்படுவதனால் உடலில் இந்த கரும்புச்சாறு அமில காரத்தன்மையை PH சமநிலையையாக பேண உதவுகின்றது.

13.பூசணி விதைகள் :

பூசணி விதைகளில் ஒமேக்கா 3 ,ஒமேக்கா 6 போன்ற சத்துகள் காணப்படுகின்றது.இவை கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

14.எண்ணெய் :

எமது உணவில் முடிந்த அளவு செக்கில் ஆட்டிய எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது.

15. மண் பாணைகளில் :

நாம் உணவு சமைக்கும் போது பழைய முறையில் மண்பாணைகளில் உணவு சமைத்தால் அது கல்லீரல் பாதிப்பு அடைவதை குறைக்கும்.

16.உடல்பயிற்ச்சி/ நடைப்பயிற்ச்சி :

உணவுமுறையோடு சேர்த்து நடைப்பயிற்சி,உடல் பயிற்சி மேற்கொள்வது எமது உடலுக்கு நல்லது.ஒரு நாளுக்கு 30  நிமிடம் படி ஒரு வாரத்திற்கு 150 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்வது கல்லீரலை பாதுகாக்கும்.

17.நல்ல தூக்கம் :

தினமும் எட்டு மணி நேரம் தொடக்கம் ஒன்பது மணி நேரம் நன்றாக தூங்குவதன் மூலம் மூளை மற்றும் கல்லீரல் என்பன புத்துணர்வு அடைகின்றன.

Click Here

Leave a comment